Monday 13 August 2012

இறால் குழம்பு

இறால்  குழம்பு 

தேவையானவை 

  • 500 கிராம் இறால்
  • 150 கிராம்  சின்ன வெங்காயம்
  • 150 கிராம்  தக்காளி
  • 50 கிராம்  பூண்டு    
  • 6 பச்சை மிளகாய் 
  • 1 துண்டு இஞ்சி 
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 1/2 ஸ்பூன் சோம்பு 
  • 1 1/2 ஸ்பூன் சீரகம் 
  • 2 ஸ்பூன் எலும்பிச்சை சாரு
  • 1 மூடி தேங்காய்
  • சிறிது கறிவேப்பிலை
  • தேவையான அளவு தேங்காய் எண்ணய்  
  •  தேவையான அளவு உப்பு 
  • 1 கரண்டி தயிர் 

செய்முறை : 


        இறாலை சுத்தம் செய்து சிறிது தயிர் சேர்த்து ,மஞ்சள் தூளை போட்டு பிசறி வைக்கவும்.தேங்காயை துருவி அரைத்து முதல் -இரண்டாம் பால்கள்
ஒவ்வொரு தம்ளாரில் எடுத்து வைக்கவும்.தக்காளி,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி எண்ணயில் வதக்கி,ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து இஞ்சியை  வைத்து மீதி தயிரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது  எண்ணய்  விட்டு மீதியுள்ள சோம்பு,சீரகம்,கறிவேப்பிலையை போட்டு பொரித்து ,அதில் அரைத்த மசாலாவை கொட்டி 5 நிமிடம் வதக்கி, இரண்டாவது  பாலை ஊற்றி,இறாலை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.இறால் வெந்ததும் எலும்பிச்சை சாரு,முதல் பாலை கலந்து ,ஒரு கொதி வந்ததும் உப்பு பார்த்து இறக்கி மூடவும் .1 /2  மணிக்கு பிறகு பரிமாறவும்.
Key word: prawn curry, இறால்  குழம்பு

No comments:

Post a Comment

adf