Tuesday, 16 June 2015

சத்து உணவு.

நார்சத்து அடங்கிய உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இங்கும் அங்கும் மருத்துவர்களும் பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருப்பிர்கள். ஆனால் நம்மில் பலர் அதை அலட்சியபடுத்துகிறோம். அது பெரும் தவறு, அதற்கு அறியாமையே மூலக் காரணம். நார்சத்தின் உண்மையான அத்தியாவசிய தேவையை உணரும்போது தான் அதன் அருமை புரியும்.
நார்சத்து குறைவான உணவுகளை உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் நோய் வந்துவிடும். அடிக்கடி மலச்சிக்கலினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நாளடைவில் மூலம் (hemorrhoids) அல்லது குதபிளவு (anal fissure) நோய்கள் வந்து விடும். இந்த நோய்கள் கடுமையான வலியைத் தரும், மேலும் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை வெகுவாக முடக்கி விடும். இவற்றை குணப்படுத்துவதற்கு பெரும்பாலான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறைகளைத்தான் பரிந்துரைப்பார்கள்.
அதிக அளவில் நார்சத்து அடங்கிய சில வகை உணவுகளை காண்போம்.

Monday, 15 June 2015

எளிய மூலிகையின் இனிய பலன்கள்

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு, புண்.
சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு.
ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்.
முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).
திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.
திரிகடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம். கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.
காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.
கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்.

Sunday, 17 May 2015

கருப்பட்டி பணியாரம்

தேவையான பொருட்க்கள்:
இட்லி மாவு ,
கருப்பட்டிதுருவியது,
தேங்காய் துருவியது,
ஏலக்காய் பொடி,
செய்முறை விளக்கம்:
அனைத்தையும் நன்றாககலைக்கவும்.பனியாரம் சுடுவது போல் சுட்டு எடுக்கவும்.
இது மிகவும் சத்தான திண்பண்டம்.இது மிகவும் சத்தான திண்பண்டம்.குழந்தைகளூக்கு.மாலையில் உணவாக கொடுக்கலாம்.நன்றாக ஜிரனமாகும்.


adf