Thursday 2 April 2015

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு புதியமுறை அறிமுகம்.

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு புதியமுறை அறிமுகம்.ரயில் டிக்கெட்டை 120- நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று 13.45 லட்சம் டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

நடை முறையில் இருந்த 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்கள் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மாத காலம் முன்கூட்டியே முன்பதிவு செய்வதால் தங்கள் விடுமுறையை திட்டமிட இது பயணிகளுக்கு பெரும் உதயவியாக உள்ளது. 

எனினும் 120 -நாள் முன்பதிவு முறை தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தாது என்று ரயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு பயனர் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இ-டிக்கெட் அமர்வுவின் உள்நுழைந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 

adf