Wednesday 15 August 2012

இறால் ப்ரை


இறால் ப்ரை 

தேவையானவை 

  • 1 கிலோ பெரிய இறால்
  • 2 ஸ்பூன் பூண்டு விழுது 
  • 1 ஸ்பூன் எலும்பிச்சை சாறு 
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள் 
  • 1/2ஸ்பூன் சீரக தூள் 
  • 2 ஸ்பூன் சோயா சாஸ்
  • 3 ஸ்பூன் கார்ன் பிலோவேர்
  • 2 ஸ்பூன் மைதா
  • 2 ஸ்பூன் தயிர்
  • தேவையான அளவு உப்பு 
  • தேவையான அளவு எண்ணெய் 
  • சிறிது மல்லி தழை
  • 1 குடமிளகாய் 
  • 1 பெரிய வெங்காயம் 

செய்முறை :

                     இறாலை சுத்தம் செய்து தண்ணீரை ஒட்ட வடித்து உப்பு,பூண்டு விழுது,சோயா சாஸ்,தயிர ஆகியவற்றை சேர்த்து பிசறி 1/2 மணி நேரம் ஊற விடவும்.பிறகு சீரக தூள்,எலுமிச்சை சாறு,கார்ன் பிலோவேர்,மைதா ஆகியவற்றை கலந்து நன்றாக பிசறி,எண்ணெயை காய வைத்து அதில் பொரித்து எடுக்கவும்.மெலிதாக நறுக்கிய வெங்காயம்,குடை மிளகாய்,மல்லி தழை தூவி பரிமாறவும்.
Key word : prawn fry

No comments:

Post a Comment

adf