Friday 24 August 2012

ரோஜா

                                           ரோஜா 

         முட்களுடன் கூடிய ரோஜா செடி கொள்ளை அழகு கொண்டது.மணம் நிறைந்த ரோஜா பூக்களை பெண்கள் தலையில் சூடுவர்.அலங்கார செடியாகவும்,பூக்களுக்காகவும் ,மருத்துவ உபயோகத்துக்காகவும் ரோஜா செடி வளர்க்கபடுகிறது.ரோஜா பூக்களிலிருந்து
"அத்தர்" எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கபடுகிறது.தாகம்,ஓக்காளம்,கீழ்வாய் எரிச்சல்,வெள்ளைபடுதல் ஆகியவற்றை குணப்படுத்தவும் ,மலமிளக்கவும் ரோஜா பூக்கள் பயன்படுகின்றன.
          ரோஜா இதழ்கள் 50 சேர்த்து அரை  லிட்டர் வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.பின்னர் அந்த தண்ணீரில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாக வரும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும்.அதில் 25 மில்லி பன்னீர் சேர்த்து 3 வேளையாக குடித்தால் வெள்ளைபடுதல் குணமாகி வரும்.
            10 கிராம் எடையில் ரோஜா இதழ்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடி நீராக்கி ,சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் பித்த நோய் கட்டுபடும்.இந்த குடிநீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
             ரோஜா குல்கந்து அற்புத மருந்து பொருள்.ரோஜா இதழ்களுடன் இரு மடங்கு எடையில்  கற்கண்டு சேர்த்து பிசைந்து ,சிறிது  தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்தால் குல்கந்து ஆகிவிடும்.இதை காலை மாலையில் நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ,வெள்ளைபடுதல் ஆகியவை குணமாகும்.
               ஒரு மாதத்துக்கு மேல் இரு வேளை சாப்பிட்டு வந்தால் இதயம் ,கல்லீரல்,நுரையீரல் ,குடல் போன்றவை வலுப்பெறும்.
 Keyword : medicinal uses of rose

1 comment:

adf