Tuesday 14 August 2012

நாகை மீன் குழம்பு

நாகை மீன் குழம்பு

தேவையானவை

  •  500 கிராம் மீன்
  • 150 கிராம் பெரிய வெங்காயம்
  • 50 கிராம் சின்ன வெங்காயம் 
  • 150 கிராம் தக்காளி 
  • 10 மிளகாய் 
  • 1 குழிகரண்டி மல்லி 
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 1/2 ஸ்பூன் சீரகம் 
  • 1/2 ஸ்பூன் கடுகு 
  • 1 ஸ்பூன் வெந்தயம் 
  • 1 மாங்காய் 
  • 3 பச்சை மிளகாய் 
  • 1 துண்டு இஞ்சி சிறிதாக 
  • 10 பல் பூண்டு  
  • சிறிது மிளகு 
  • சிறிது கறிவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு 
  • தேவையான அளவு நல்லெண்ணய்
  • 1 குழி கரண்டி தேங்காய் பூ 
  • எலுமிச்சை அளவு புளி

செய்முறை 

                    பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெலிதாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.மிளகாயை வகுந்து வைக்கவும்.மாங்காயை நீள வாக்கில் மெலிதாக நறுக்கவும்.மிளகாய்,மிளகு,தேங்காய் பூ,ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம்,பூண்டை வதகி எடுத்து,வறுத்த மிளகு, சீரகத்துடன்,இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.கனமான பாத்திரத்தில் 100 மில்லி நல்லெண்ணய் விட்டு கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு பொரிக்கவும்.பச்சை மிளகாய் போடவும்.அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி,தேங்காய் மசாலாவை சேர்த்து வதக்கி,பிறகு இரண்டாவதாக அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி,புளி தண்ணீரை கலந்து ,மாங்காயை போட்டு  நன்றாக கொதிக்க விடவும்.மஞ்சள் தூளை கலந்து விடவும்.15 நிமிடம் கொதித்ததும் தேவையான உப்பு கலந்து ,கழுவிய மீனை போட்டு ஒரு கொதி விடவும்.ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.
Key word : fish curry

No comments:

Post a Comment

adf