Saturday 25 August 2012

மணித்தக்காளி

                     மணித்தக்காளி 

                 தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணித்தக்காளி மூலிகையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம்.

                 மணித்தக்காளி இலைகளை பறித்து ,தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
                   பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம்.இதே போல் ஒரு நாளைக்கு 6 முறை செய்தால் வாய்புண் வேகமாக குணமாகும்.மணித்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3  வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.நாக்குப்புண் ,குடல்புண் குணமாக ,மணித்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.
                     நாக்கு சுவையின்மை ,வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணித்தக்காளி வத்தலுக்கு உள்ளது.எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில் ,தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம்.மார்பு சளி இளகி வெளிப்படவும் ,மலச்சிக்கல் குறையவும் மணித்தக்காளி வத்தல் பயன்படுகிறது.நாட்டு மருந்து கடைகளில் மணித்தக்காளி வத்தல்  கிடைக்கும்.
Keyword : medicinal uses of manathakkaali,medicinal uses of blacknight shade,blacknight shade

1 comment:

  1. ayya/amma, mikka nannri. migavum payanullathaga irukkirathu thangal thaghaval. melum pala pala mooligai marunthu therivikkavum enru kettu kollugiren.

    ReplyDelete

adf