Sunday, 17 May 2015
கொள்ளு சூப்.
சூப் தயாரிக்க தேவையன பொருட்கள்:-
- கொள்ளு - ஒரு மேசைக்கரண்டி,
- புளி- 1கிராம்,
- சீரகம் - ஒரு தேக்கரண்டி,
- மிளகு - 5,
- கொத்த மல்லி - கால் தேக்கரண்டி,
- சின்ன வெங்காயம் - 2,
- மிளகாய் வற்றல்-2,
- பூண்டு - 2 பற்கள்,
- உப்பு - தேவையான அளவு,
- பொதினா- தேவையான அளவு,
- கொத்தமல்லிஇலை-தேவையான அளவு,
- கடுகு, எண்ணெய் - தாளிக்க.
கொள்ளுடன் சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு,பொதினா மற்றும் கொத்த மல்லி சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். புளியை ஊரவைத்து நன்றாக கரைத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளிக்கவும். கரைத்த புளி, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிரிது தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதிக்கும்முன்(நுரைத்தவுடன்) இறக்கவும்.
சுவையான கொள்ளு சூப் தயார். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். மிதமான சூட்டில் சூப் போலவும் பருகலாம்.
குரிப்பு:
இந்த சூப் ஜலதோசத்திற்கு நல்லது. இதை 5 தினங்கள் தொடர்ச்சியக உட்கொண்டால் ஜலதோசம் குனமாகும்.
Thursday, 2 April 2015
ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு புதியமுறை அறிமுகம்.
ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு புதியமுறை அறிமுகம்.ரயில் டிக்கெட்டை 120- நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று 13.45 லட்சம் டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நடை முறையில் இருந்த 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்கள் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மாத காலம் முன்கூட்டியே முன்பதிவு செய்வதால் தங்கள் விடுமுறையை திட்டமிட இது பயணிகளுக்கு பெரும் உதயவியாக உள்ளது.
எனினும் 120 -நாள் முன்பதிவு முறை தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தாது என்று ரயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு பயனர் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இ-டிக்கெட் அமர்வுவின் உள்நுழைந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)